மேற்கு வங்காளம்: பா.ஜ.க.வேட்பாளர் போட்டியிட மறுப்பு


மேற்கு வங்காளம்: பா.ஜ.க.வேட்பாளர் போட்டியிட மறுப்பு
x

மேற்கு வங்கத்தின் அசன்சோலில் போஜ்புரி பாடகர் பவன் சிங் போட்டியிடுவார் என பா.ஜ.க. அறிவித்திருந்தது.

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். பிரதமர் மோடி, வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 34 மத்திய மந்திரிகளும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், முதல் கட்டமாக 195 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியானது. அதில் மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக பவன் சிங் போட்டியிடுவார் என்று பா.ஜ.க. நேற்று அறிவித்தது.

இந்தநிலையில், பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பவன்சிங் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் அவர் விலகி உள்ளார். போஜ்புரி மொழி பாடகரான பவன் சிங் சில காரணங்களால் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். அறிவிக்கப்பட்ட பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிட மறுப்பு தெரிவித்த சம்பவம் பா.ஜ.க.நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போஜ்புரி மொழி பாடகர் பவன்சிங் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி என்னை நம்பி மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் வேட்பாளராக அறிவித்தது, ஆனால் சில காரணங்களால் என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது என பதிவிட்டுள்ளார்.


Next Story