எனது ரத்தத்தை கூட சிந்துவேன்.. ஆனால் மாநிலத்தை பிரிக்க அனுமதிக்க மாட்டேன் - மம்தா பானர்ஜி

Image Courtesy : PTI
தனது சொந்த இரத்தத்தை சிந்தவும் தயார் என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
சில பாஜக தலைவர்கள் ,வங்காளத்தில் இருந்து தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர் ,இந்த நிலையில் இத்தகைய முயற்சிகளை முறியடிக்க, தேவைப்பட்டால், தனது சொந்த இரத்தத்தை சிந்தவும் தயார் என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் அலிபுர்துவாரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் மேற்கு வங்காள முதல் - மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது ;
தேர்தல்கள் நெருங்கி வருவதால், பாஜக தனி மாநில கோரிக்கைகளை வலியுறுத்துகிறது . வடக்கு வங்காளத்தின் தனி மாநிலத்தை கோருகிறது. எனது இரத்தத்தை சிந்தவும் நான் தயாராக இருக்கிறேன், ஆனால் மாநிலத்தை பிரிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.மேலும் சிலர் என்னை மிரட்டுகிறார்கள். நான் கவலைப்படவில்லை. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்படவில்லை.இவ்வாறு கூறியுள்ளார்