மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைந்து மக்கள் பணியில் ஈடுபட வேண்டும்' - பசவராஜ் பொம்மை டுவிட்
தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம் பெற்று மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு,
தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம் பெற்று மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது; " கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல் மந்திரி மு.க.ஸ்டாலின் விரைவில் குணம் அடைய வாழ்த்துகிறேன். அவர் விரைந்து நலம் பெற்று, மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரும் மு.க ஸ்டாலினை தொடர்பு கொண்டு, விரைவில் குணம் அடைய வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story