ஆந்திரா: இந்திய விமானப்படை விமானங்கள் அவசர கால தரையிறங்கும் பயிற்சி


ஆந்திரா: இந்திய விமானப்படை விமானங்கள் அவசர கால தரையிறங்கும் பயிற்சி
x

ஆந்திராவில் இந்திய விமானப்படை விமானங்கள் அவசர கால தரையிறங்கும் பயிற்சியில் ஈடுபட்டன.

அமராவதி,

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் பிச்சிகல குடிபாடு கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை-16 இல் அவசர கால தரையிறங்கும் சோதனை பயிற்சியை இந்திய விமானப்படை இன்று வெற்றிகரமாக நடத்தியதாக பாபட்லா எஸ்.பி. வகுல் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

இது ஏ.என்-32 மற்றும் டோர்னியர் ஆகிய இரண்டு போக்குவரத்து விமானங்களும், எதிர்காலத்தில் ஏற்படும் எந்த ஒரு அவசர கால தேவையையும் எதிர்கொள்ள இந்திய விமானப்படை நடத்தும் சோதனையின் ஒரு பகுதியாகும். இந்த சோதனை பயிற்சி வெற்றிகரமாக முடிந்தது. ஏ.என்-32 மற்றும் டோர்னியர் ஆகிய இரண்டு போக்குவரத்து விமானங்கள் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை-16 இல் 4.1 கி.மீ நீளமுள்ள அவசர கால தரையிறங்கும் வசதி போர்க்காலத்தில் விமானங்களை தரையிறக்க ஒரு விருப்பமாக இருக்கும் என்றார்.

இந்த சோதனை பயிற்சி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இரண்டு மணி நேர இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டது. இதனால், பாபட்லா மாவட்ட போலீசார் நெடுஞ்சாலை-16இல் காலை 7:30 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.

சுகோய் எஸ்.யு-30 உள்ளிட்ட சில போர் விமானங்களும் அந்த நெடுஞ்சாலையில் தரையிறங்காமல் பறந்ததாக எஸ்.பி. தெரிவித்தார்.


Next Story