பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம்: அமித் ஷா பிரசாரம்


பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம்: அமித் ஷா பிரசாரம்
x

முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம். அந்த 4 சதவீதத்தை எஸ்சி, எஸ்டி, பிசி மக்களுக்கு பிரித்துக் கொடுப்போம் என்று அமித்ஷா பேசினார்.

ஐதராபாத்,

தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அங்கு பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: "தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம். அந்த 4 சதவீதத்தை எஸ்சி, எஸ்டி, பிசி மக்களுக்கு பிரித்துக் கொடுப்போம்.

எஸ்சி இடஒதுக்கீட்டில் இருந்து மடிகா சமூகத்துக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும். தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் (கே.சி.ஆர்) ஹைதராபாத் விடுதலை நாளை கொண்டாடுவதற்கு அஞ்சுகிறார். ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசி மீதான அச்சமே இதற்கு காரணம்" என்றார்.


Next Story