காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் புதிய அனுமார் கோயில்களை கட்டுவோம் - டி.கே.சிவக்குமார்


காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் புதிய அனுமார் கோயில்களை கட்டுவோம் -  டி.கே.சிவக்குமார்
x

கர்நாடகா சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக மே 10ல் நடக்கிறது.

பெங்களூரு,

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், அனுமர் கோயில்களை மேம்படுத்துவதாகவும், பல்வேறு பகுதிகளில் புதிய அனுமர் கோயில்களை கட்டுவதாகவும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக மே 10ல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு அறிவிப்புகளுடன் சமீபத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலம் முழுவதும் உள்ள அனுமர் கோயில்களை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மேலும், பல்வேறு பகுதிகளில் புதிய அனுமர் கோயில்கள் கட்டுவதற்கும் எங்கள் கட்சி முன்னுரிமை அளிக்கும். அஞ்சனாத்ரி மலையின் மேம்பாட்டை மேற்பார்வையிடவும், அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிறப்பு வாரியத்தை ஏற்படுத்துவோம்.

அனுமரின் கொள்கைகளை பற்றி இளைஞர்களுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை நாங்கள் ஏற்பாடு செய்வோம் என்றார்.


Next Story