"புதுச்சேரி கவர்னர் மாளிகையில் இப்தார் நோன்பு" - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு


புதுச்சேரி கவர்னர் மாளிகையில் இப்தார் நோன்பு - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x

இப்தார் விருந்து நடத்த, ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக புதுச்சேரி கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் இப்தார் விருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் வரும் 19ஆம் தேதி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இப்தார் விருந்து நடத்த, ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக புதுச்சேரி கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இப்தார் நோன்புக்கு கடந்த 11ஆம் தேதியன்றே துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்து விட்டதாகவும், சமூக வலைதளங்களில் உலாவரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story