சட்டவிரோதமாக நிலம் விற்பனை: அயோத்தி மேயர், பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 40 பேர் மீது குற்றச்சாட்டு


சட்டவிரோதமாக நிலம் விற்பனை: அயோத்தி மேயர், பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 40 பேர் மீது குற்றச்சாட்டு
x

அயோத்தியில், அயோத்தி மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்தும், வாங்கியும் மோசடி செய்துள்ளனர்.

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், அயோத்தி மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்தும், வாங்கியும் மோசடி செய்துள்ளனர். அந்த நிலங்களில் வீடும் கட்டி உள்ளனர். இதில் ஈடுபட்டதாக 40 பேர் பெயர் அடங்கிய பட்டியலை அயோத்தி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், அயோத்தி நகர மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயா, அயோத்தி பா.ஜனதா எம்.எல்.ஏ. வேதபிரகாஷ் குப்தா, பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. கோரக்நாத் பாபா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயோத்தி மேம்பாட்டு ஆணையம் கூறியுள்ளது.

ஆனால், மேயரும், பா.ஜனதா எம்.எல்.ஏ.வும் இதை மறுத்துள்ளனர். அதே சமயத்தில், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு சமாஜ்வாடி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. :


Next Story