அரிசி ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவுக்கு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை


அரிசி ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவுக்கு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை
x

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் உலகம் முழுவதும் உணவு பண்டங்களின் விலை உயரும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. உலகில் அரிசி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த தடை காரணமாக அரிசி விலை உயரக்கூடும் என்ற அச்சம் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ளது.

இந்த தடை குறித்து செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே உலகம் முழுவதும் அரிசிக்கு பெரும் தேவை உருவானது. குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் உள்ள கடைகளில் அரிசி விலை பன்மடங்காக உயர்த்தப்பட்டது. இருப்பினும் மக்கள் முண்டியடித்து அரிசி மூட்டைகளை வாங்கிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் இந்த தடை குறித்து குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பியர்-ஒலிவியர் கோரின்சாஸ் கூறுகையில், "இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் உலகம் முழுவதும் உணவு பண்டங்களின் விலை உயரும். சில நாடுகள் எதிர்வினை நடவடிக்கைகளையும் எடுக்கலாம். எனவே இந்த தடையை நீக்க கோருகிறோம். 2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் சற்று இறங்கி இருந்தாலும், ஒரு வலிமையான வளர்ச்சி தென்படுகிறது. எனவே இந்த தடை தேவையற்றது" என்று தெரிவித்துள்ளார்.


Next Story