டெல்லியில் வளர்ச்சி குறையவில்லை, காற்று மாசு குறைந்துள்ளது- அரவிந்த் கெஜ்ரிவால்


டெல்லியில் வளர்ச்சி குறையவில்லை, காற்று மாசு குறைந்துள்ளது- அரவிந்த் கெஜ்ரிவால்
x

Photo Credit: PTI

தலைநகர் டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை, ஆனால் மாசு குறைந்துள்ளது என அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை, ஆனால் மாசு குறைந்துள்ளது என அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: 2016ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும்போது, வளர்ச்சிகள் வேகமடைந்துள்ளன. பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மேம்பாலங்கள் தொடர்ந்து கட்டப்பட்டு வருகின்றன. டெல்லியில் கடந்த 8 ஆண்டுகளில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை, ஆனால் இந்த காலகட்டத்தில் மாசு குறைந்துவிட்டது" என்றார்.


Next Story