மராட்டியம், குஜராத் மாநில தினம் : 30 கவர்னர் மாளிகைகளில் இன்று கொண்டாட்டம்


மராட்டியம், குஜராத் மாநில தினம் : 30 கவர்னர் மாளிகைகளில் இன்று கொண்டாட்டம்
x

கோப்புப்படம்

மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்களின் தினம், 30 மாநிலங்களின் கவர்னர் மாளிகைகளில் இன்று கொண்டாடப்படுகிறது.

புதுடெல்லி,

பொதுவாக, ஒரு மாநிலம் உருவான தினம், அந்த மாநிலத்தில் மட்டுமே கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், பிரதமர் மோடி, 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார்.

நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை பாதுகாக்க ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் கலாசார பெருமைகளை பிற மாநிலங்களும் அறிந்து கொள்ள வேண்டும், கொண்டாட வேண்டும் என்று அவர் கூறி வருகிறார். அதற்காக, காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இன்று கொண்டாட்டம்

இந்நிலையில், மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்கள் உருவான தினம், இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. முதல்முறையாக, இதை பிற மாநிலங்களின் கவர்னர் மாளிகைகளும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், அசாம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்பட 22 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் தங்கள் கவர்னர் மாளிகைகளில் மராட்டியம், குஜராத் மாநில தினத்தை ெகாண்டாடுவதை உறுதி செய்துள்ளன.

கலாசார பெருமை

அதன்படி, அந்த கவர்னர் மாளிகைகளில், அந்தந்த மாநிலத்தில் வசிக்கும் மராட்டியம் மற்றும் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்களை அழைத்து விழா நடத்தப்படும். 2 மாநிலங்களின் கலாசார பெருமையையும், உணவுவகைகளையும் பறைசாற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

2 மாநிலங்களின் பாரம்பரிய உடையில் அனைவரும் கலந்து கொள்வார்கள்.

இதுபோல், பிற மாநிலங்களின் தினம் வரும்போது, அவற்றையும் கவர்னர் மாளிகைகளில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story