ஆல்தூரில் தெருநாய்கள் அட்டகாசத்தால் மக்கள் பீதி


ஆல்தூரில் தெருநாய்கள் அட்டகாசத்தால் மக்கள் பீதி
x
தினத்தந்தி 6 Oct 2022 7:00 PM GMT (Updated: 6 Oct 2022 7:00 PM GMT)

ஆல்தூரில் தெருநாய்கள் அட்டகாசத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஆல்தூர் பகுதிகளில் இரவு நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. அதாவது தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை துரத்தி சென்று கடித்து குதறுகிறது. மேலும் வெளியூர்களில் இருந்து பஸ்சில் இறங்கிவரும் நபர்களை வழிமறித்து கடிக்கிறது.

பகல் நேரங்களில் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியவில்லை. தொடர்ந்து தெருநாய்கள் அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் அதிருப்தியடைந்துள்ள பொதுமக்கள் தெருநாய்களை பிடிக்கும்படி கிராம பஞ்சாயத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இல்லையென்றால் ஆல்தூர் பகுதிகளில் பிடிக்கப்படும் தெருநாய்களை, வெளியூர்களில் கொண்டு சென்று விடும்படி கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று கொண்டு கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் நாய்கள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.


Next Story