ஆந்திராவில் கார் மீது லாரி மோதி விபத்து... மருத்துவ கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு !
ஆந்திராவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரா,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியை சேர்ந்த விகாஸ் ரெட்டி, தலாரி பிரவீன் மற்றும் கலயான்ராம் உள்ளிட்ட 3 பேரும் சித்தூரில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றனர்.
அங்கு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு குப்பத்திற்கு காரில் சென்றனர். சின்னசெட்டி பள்ளி அருகே கார் சென்றபோது லாரி மீது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்த 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story