அசாம் மாநிலத்தில் கடந்த 12 ஆண்டுகளில் 1,300 யானைகள் உயிரிழப்பு


அசாம் மாநிலத்தில் கடந்த 12 ஆண்டுகளில் 1,300 யானைகள் உயிரிழப்பு
x

அசாம் மாநிலத்தில் கடந்த 12 ஆண்டுகளில் 1,300 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

அசாமில் ஹிமந்த பிஸ்வா சார்மா தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது.

சட்டசபை விவாதத்தின்போது அந்த மாநில வனத்துறை மந்திரி, "மக்கள்தொகை அதிகரிப்பின் காரணமாக யானைகளின் இருப்பிடங்களை ஆக்கிரமிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இதனால் உணவை தேடி மனித குடியிருப்புக்குள் புகும் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் உருவாகிறது. இந்த காரணத்தினால் வருடத்திற்கு சராசரியாக 80 யானைகளுக்கும் அதிகமாக சாகின்றன. மேலும் 70 மனித உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. கடந்த 12 ஆண்டுகளில் 1330 யானைகள் உயிரிழந்துள்ளன" என்றார்.


Next Story