பெங்களூருவில், தண்ணீர் தட்டுப்பாடு: ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்த முடிவு?


பெங்களூருவில், தண்ணீர் தட்டுப்பாடு: ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்த முடிவு?
x

ஓட்டலுக்கு தண்ணீர் தேவை அதிகமாக இருப்பதால், டேங்கர் வாகனங்கள் மூலமாக தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு நகரில் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டேங்கர் வாகனங்கள் மூலமாக வீடுகளுக்கு தேவையான தண்ணீரை வாங்கி மக்கள் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீடுகளை போன்று ஓட்டல்கள், பிற கடைகளுக்கு தேவையான தண்ணீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஓட்டலுக்கு தண்ணீர் தேவை அதிகமாக இருப்பதால், டேங்கர் வாகனங்கள் மூலமாக தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பெங்களூருவில் உள்ள ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரான பி.சி.ராவ் நிருபர்களிடம் கூறுகையில், 'பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் ஓட்டல் நடத்துவதற்கு சிரமம் ஏற்பட்டு இருப்பது உண்மை தான். ஏராளமான ஓட்டல் உரிமையாளர்கள் டேங்கர் வாகனங்களில் விற்கப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இது உரிமையாளர்களுக்கு முக்கிய செலவாகும். இது மே அல்லது ஜூன் முதல் வாரம் வரை நீடிக்கும். அதுவரை உணவு பொருட்களின் விலையை உயர்த்திவிட்டு, ஜூன் மாதத்தில் மீண்டும் விலையை குறைக்க முடியாது. தற்போதைய சூழ்நிலையில் உணவுப்பொருட்களின் விலையை உயர்த்த முடிவு செய்யவில்லை." என்றார்.


Next Story