பத்ராவதி பகுதியில் அசுத்த நீரை குடித்த 5 பேருக்கு வாந்தி- மயக்கம்


பத்ராவதி பகுதியில் அசுத்த நீரை குடித்த 5 பேருக்கு வாந்தி- மயக்கம்
x
தினத்தந்தி 20 Jun 2023 6:30 PM GMT (Updated: 20 Jun 2023 6:30 PM GMT)

பத்ராவதி பகுதியில் அசுத்த நீரை குடித்த 5 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகாவில் துங்க பத்ரா ஆறு ஓடுகிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பத்ராவதி பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் லாரிகளில் ஒரு வாரத்திற்கு ஒருமுறை பத்ராவதி பகுதிகளில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரில் மாசு கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்றுமுன்தினம் ஒசமனே பகுதியில் அசுத்த தண்ணீர் குடித்த 5 சிறுவர்களுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.

அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ராஜேஷ் சுரகிஹள்ளி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

பத்ராவதி சுபாஷ் நகர், அஸ்வத் நகர், விஜயநகர், அனுமந்த நகர், போவி காலனி பகுதிகளில் இதுவரை 80 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். எனவே பொதுமக்கள் வீடுகளில் தண்ணீர் சேமிக்கும் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். பத்ராவதி டவுன் பகுதிகளில் சாலையோரங்களில் உணவு விற்பனை கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது, என்றார்.



Next Story