டெல்லி: சூட்கேஸ் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் உடல்... போலீசார் விசாரணை
சூட்கேஸ் பெட்டிக்குள் இருந்த பெண்ணின் வயது சுமார் 28-30 வயது இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
புதுடெல்லி,
மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் நேற்று மாலை சூட்கேஸில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, ஒரு சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அவர்களின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
வாய்க்காலில் இருந்த சூட்கேஸ் பெட்டியை வெளியே எடுத்தது திறந்தபோது உள்ளே ஒரு பெண்ணின் உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்ட பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சூட்கேஸ் பெட்டிக்குள் இருந்த பெண்ணின் வயது சுமார் 28-30 வயது இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். உடல் பிரேத பரிசோதனைக்காக சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இறந்த பெண் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.