தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில்முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சாமி தரிசனம்


தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில்முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சாமி தரிசனம்
x
தினத்தந்தி 12 April 2023 6:45 PM GMT (Updated: 12 April 2023 6:46 PM GMT)

தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சாமி தரிசனம் செய்தார்.

மங்களூரு-

தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சாமி தரிசனம் செய்தார்.

பசவராஜ் பொம்மை சாமி தரிசனம்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் 2 கட்டங்களாக 166 தொகுதிகளுக்கும், ஜனதாதளம்(எஸ்) 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருந்தது. வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்த, பா.ஜனதா நேற்று முன்தினம் 189 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் 52 பேர் புதுமுகங்கள் ஆவர்.

இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று காலை தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் கோவிலுக்கு வந்தார். அங்கு அவர் சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சமாதானப்படுத்துவோம்

சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தேர்தல் முதல் கட்ட பணிகள் முடிவடைந்ததால் மஞ்சுநாதரை தரிசிக்க வந்தேன். பா.ஜனதாவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காவிட்டால் அதிருப்தி ஏற்படுவது சகஜம் தான். டிக்கெட் கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்துவோம். ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று விட்டதாக தெரிவித்துள்ளார். ஜெகதீஷ் ஷெட்டரை கட்சி மேலிடம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும். அங்காராவிடம் நான் பேச்சுவார்த்தை நடத்துவேன்.

தனிப்பெரும்பான்மையுடன்...

வினய் குல்கர்னியை பா.ஜனதா குறி வைக்கவில்லை. எதிராளி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பயப்படாமல் அவர்களை எதிர்த்து போட்டியிட வேண்டும். எப்படி போராட வேண்டும் என்று எங்களுக்கு நன்கு தெரியும். இந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

பா.ஜனதாவின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story