கர்நாடகத்தில் தினமும் 12 கலவர வழக்குகள் பதிவாகிறது


கர்நாடகத்தில் தினமும் 12 கலவர வழக்குகள் பதிவாகிறது
x

கர்நாடகத்தில் தினமும் 12 கலவர வழக்குகள் பதிவாகிறது

பெங்களூரு: கர்நாடகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவாகும் கலவர வழக்குகள் குறித்து மாநில போலீஸ் துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரை பல்வேறு போலீஸ் நிலையங்களில் 18 ஆயிரத்து 428 கலவர வழக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக 2018-ம் ஆண்டு மாநிலத்தில் 4,746 கலவர வழக்குகள் பதிவாகி உள்ளது. 2019-ம் ஆண்டில் 4,107 வழக்குகளும், 2020-ம் ஆண்டு 4,553 வழக்குகளும், 2021-ம் ஆண்டு 3,971 வழக்குகளும், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 1,051 வழக்குகளும் பதிவாகி உள்ளது.

18,428 வழக்குகளில் 5,279 வழக்குகள் நில பிரச்சினை தொடர்பாக பதிவானவை. 311 வழக்குகள் அரசியல் பிரச்சினை காரணமாக பதிவானது. 60 மத கலவர வழக்குகளும் பதிவாகி உள்ளது. மற்ற வழக்குகள் பல்வேறு பிரச்சினை காரணமாக பதிவாகி உள்ளது. கர்நாடகத்தில் தினமும் 12 கலவர வழக்குகள் பதிவாகி வருகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story