கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்-தற்காலிக பட்டியலை வெளியிட்டது பள்ளி கல்வித்துறை


கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்-தற்காலிக பட்டியலை வெளியிட்டது பள்ளி கல்வித்துறை
x

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தற்காலிக பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தற்காலிக பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெறும். அதுபோல், 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான தற்காலிக பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான தற்காலிக பட்டியலையும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

ஏப்ரல் 1-ந்தேதி தொடக்கம்

அதன்படி, ஏப்ரல் 1-ந்தேதி மொழி பாடங்களுக்கான தேர்வு (கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ், பிற மொழிகள்) நடக்கிறது. ஏப்ரல் 4-ந் தேதி கணிதம், ஏப்ரல் 6-ந் தேதி ஆங்கிலம் மற்றும் கன்னடம், ஏப்ரல் 8-ந் தேதி எலெக்ட்ரீக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், என்ஜினீயரிங் கிராபிக்ஸ், கம்ப்யூட்டர் தேர்வுகள் நடக்கிறது. ஏப்ரல் 10-ந் தேதி அறிவியல், இந்துஸ்தானி, சங்கீதமும், ஏப்ரல் 12-ந் தேதி இந்தி உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வுகளும், ஏப்ரல் 15-ந் தேதி சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வும் நடக்க உள்ளது.

பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள இந்த தற்காலிக தேர்வுக்கான அட்டவணை பட்டியலுக்கு பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகள் ஆட்சேபனை தெரிவிக்க அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந் தேதி வரை காலஅவகாசம் உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் காலை 10.30 மணியில் இருந்து மதியம் 1.45 மணி வரை நடைபெற உள்ளது என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Next Story