குடகில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்; சுகாதாரத்துறை அதிகாரி வேண்டுகோள்


குடகில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்; சுகாதாரத்துறை அதிகாரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 Jun 2023 6:45 PM GMT (Updated: 10 Jun 2023 11:01 AM GMT)

குடகில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடகு-

குடகில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெங்கு காய்ச்சல்

குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பருவமழை தொடங்கி உள்ளதால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் குடகில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறை சார்பில் மாவட்டத்தில் அனைத்து பகுதியையும் தூய்மையாக வைக்கவும், தண்ணீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குஷால்நகர் தாலுகா சுண்டிகொப்பா பகுதியில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி சதீஸ்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தண்ணீர் தேங்கிய பகுதியை உடனடியாக சுத்தம் செய்ய அவர் உத்தரவிட்டார்.

பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

இதையடுத்து சதீஸ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், பருவமழை காலம் தொடங்க உள்ளதால் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். டெங்கு பரவலை தடுக்க மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சாலைகளில் கழிவுநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த கூடும். இதனால் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.


Next Story