இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 16 April 2023 9:31 AM IST (Updated: 16 April 2023 9:43 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் 57,542 பேர் தற்போது கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. கடந்த 5-ந் தேதி 4 ஆயிரத்தை தாண்டியும், 6-ந் தேதி 5 ஆயிரத்தை தாண்டியும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் 11,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. நேற்று தொடங்கி இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 10,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 57,542 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story