இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் கேரளா, கர்நாடகா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 4,309 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story