மங்களூருவில் மின்னல் தாக்கி மளிகைக்கடையில் பயங்கர தீ விபத்து


மங்களூருவில் மின்னல் தாக்கி மளிகைக்கடையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 11 July 2023 6:45 PM GMT (Updated: 11 July 2023 6:45 PM GMT)

மங்களூருவில் மின்னல் தாக்கியதில் மளிகைக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

மங்களூரு-

மங்களூருவில் மின்னல் தாக்கியதில் மளிகைக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

மின்னல் தாக்கி தீப்பிடித்தது

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் முன்னூர் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் அப்ரோஸ். இவர் அந்தப்பகுதியில் சொந்தமாக மளிகைக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் பீட்டர் அப்ரோஸ், கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நள்ளிரவில் அந்தப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

இந்த நிலையில் திடீரென்று மளிகைக்கடையில் மின்னல் தாக்கியது. இதில் மளிகைக்கடை தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென கடை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

ரூ.3 லட்சம் பொருட்கள்

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள், உடனடியாக பீட்டா் அப்ரோசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பீட்டர் விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.

பின்னர், அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அதற்குள் கடையில் இருந்த குளிர்பதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் உல்லால் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story