எங்களுக்கு வாக்கு வங்கி முக்கியம் அல்ல: பிரதமர் மோடி


எங்களுக்கு வாக்கு வங்கி முக்கியம் அல்ல: பிரதமர் மோடி
x

எங்களுக்கு வாக்கு வங்கி முக்கியம் அல்ல. நாங்கள் வளர்ச்சிக்கு தான் முன்னுரிமை அளிக்கிறோம் என்று பிரதமர் மோடி பேசினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் ஆளும் பா.ஜனதா உள்பட அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இதையொட்டி பிரதமர் மோடி உள்பட பா.ஜனதா தலைவர்கள் கர்நாடகத்திற்கு அடிக்கடி வரத்தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடி கடைசியாக கடந்த 12-ந் தேதி உப்பள்ளிக்கு வருகை தந்து, தேசிய இளைஞர் தின விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி,

எங்களுக்கு வாக்கு வங்கி முக்கியம் அல்ல. நாங்கள் வளர்ச்சிக்கு தான் முன்னுரிமை அளிக்கிறோம். இரடடை என்ஜின் அரசால், இரட்டை நலத்திட்டங்கள் கிடைக்கிறது. இதனால் கர்நாடகம் பயன் அடைந்து வருவதை நீங்கள் பார்க்க முடியும். லம்பானி, பஞ்சாரா போன்ற இன மக்களை பாதுகாக்க எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த லம்பானி இனமக்கள் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மராட்டியம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் வாழ்கிறார்கள். இவ்வாறு மோடி பேசினார்.


Next Story