சிறுவனை கொன்ற வழக்கில்விவசாயிக்கு ஆயுள் தண்டனை


சிறுவனை கொன்ற வழக்கில்விவசாயிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 17 Aug 2023 6:45 PM GMT (Updated: 17 Aug 2023 6:46 PM GMT)

சிறுவனை கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிவமொக்கா :-

சிறுவன் கொலை

சிவமொக்கா டவுன் ஆல்குளா பகுதியை சேர்ந்தவர் நிங்கராஜா. விவசாயி. இவரது மகன் பிரேம்குமார் (வயது 8). சிகாரிப்புரா தாலுகா சுர்ச்சிகுந்தி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜப்பா(40). விவசாயி.

பசவராஜப்பாவுக்கும் நிங்கராஜாவுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் பசவராஜப்பா கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ந்தேதி நிங்கராஜாவின் மகன் பிரேம்குமாரை கடத்தி சென்று குமதவதி ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து வினோபாநகர் போலீசில் நிங்கராஜா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசவராஜப்பாவை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

பின்னர் அவரைகோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு சிவமொக்கா கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்தவழக்கில் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.

அப்போது, பசவராஜப்பா மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3¼ லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story