வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவர் பசவராஜ் பொம்மை- காங்கிரஸ் குற்றச்சாட்டு


வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில்  மூளையாக செயல்பட்டவர் பசவராஜ் பொம்மை-  காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு: வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பசவராஜ் பொம்மை மீது வழக்கு

நமது நாட்டின் வரலாற்றிலேயே வாக்காளர்களின் தகவல்களை திருடிய மோசமான சம்பவம் கர்நாடகத்தை தவிர வேறு எங்கும் நடந்ததில்லை. இதன்மூலம் கர்நாடக மக்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சியில் பா.ஜனதா அரசு ஈடுபட்டுள்ளது. பெங்களூரு நகர பொறுப்பு மந்திரியாக இருக்கும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மாநகராட்சி தலைமை கமிஷனர் மீது வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?.

சிலுமே நிறுவனத்தின் மூலமாக வாக்காளர்களின் தகவல்களை திருடிய முதல்-மந்திரி மற்றும் மாநகராட்சி தலைமை கமிஷனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதாக முதலில் கூறிய பசவராஜ் பொம்மை, பின்னர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். முதல்-மந்திரியின் உத்தரவின் பேரிலேயே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ராஜினாமா செய்ய வேண்டும்

வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவரே பசவராஜ் பொம்மை தான். அவருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம், வாக்காளர்களின் பெயர்களை நீக்கியது குறித்து மாநில மக்களுக்கு பசவராஜ் பொம்மை உரிய பதில் அளிக்க வேண்டும்.

கே.ஆர்.புரம் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வான நந்தீஷ் ரெட்டி சிலுமே நிறுவனத்திற்கு ரூ.18 லட்சம் கொடுத்துள்ளார். அதுபற்றி முதல்-மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும். வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தை காங்கிரஸ் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. இந்த முறைகேட்டுக்கு பொறுப்பு ஏற்று முதல்-மந்திரி பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்ய வேணடும். சம்பந்தப்பட்ட மந்திரிகளிடமும் ராஜினாமா பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story