இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் நேற்று தொற்று பாதிப்பில் இருந்து 188 பேர் மீண்டனர்.
புதுடெல்லி,
நாட்டில் இப்போது கொரோனா தினசரி பாதிப்பு 200-க்குள் அடங்கி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 186 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 140 ஆக குறைந்தது. தொற்றால் இதுவரையில் 4 கோடியே 49 லட்சத்து 92 ஆயிரத்து 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று தொற்று பாதிப்பில் இருந்து 188 பேர் மீண்டனர். தொற்றில் இருந்து இதுவரை மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 58 ஆயிரத்து 447 ஆகும். கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 51 குறைந்தது. இதையடுத்து தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2,450 ஆகும்.
கொரோனா தொற்றினால் நேற்று முன்தினம் ஒருவரும் பலியாகவில்லை. நேற்று 3 பேர் பலியாகி உள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட கொரோனா பலிகளில் ஒன்றை கணக்கில் சேர்த்ததும் அடங்கும். இதையடுத்து தொற்றுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 891 ஆக உயர்ந்துள்ளது.