தேனீக்கள் கொட்டியதில் வாலிபர் உயிரிழப்பு
பசவபட்டணாவில் தேனீக்கள் கொட்டியதில் வாலிபர் உயிரிழந்தார்.
சிக்கமகளூரு;
தாவணகெரே மாவட்டம் பசவபட்டணா அருகே உள்ள மடிவாளா பகுதியை சேர்ந்தவர் பரசப்பா. இவரது மகன் மல்லேஷ் (வயது 24). இவர் அதே கிராமத்தில் உள்ள முந்திரி பண்ணை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அருகில் உள்ள மரத்தில் இருந்த தேனீக்கள் திடீரென களைந்துள்ளது. அந்த தேனீக்கள் நடந்து சென்றுகொண்டிருந்த மல்லேசை பயங்கரமாக கொட்டி உள்ளது. இதில் மல்லேஷ் பலத்த காயம் அடைந்து அலறி உள்ளார்.
அவரது சத்தம்கேட்டு அந்த பகுதியினர் விரைந்து வந்து மல்லேசை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மல்லேசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பசவபட்டணா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story