சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.
சபரிமலை,
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு தமிழ் மாதம் பிறக்கும் போதும் ஐந்து நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அந்த வகையில் ஆனி மாத பூஜைக்காக நடை இன்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்து தீபாராதனை காண்பித்தார். அதைத் தொடர்ந்து நாளை முதல் வரும் 19 ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.
இதற்காக ஏற்கனவே ஆன்லைனில் முன் பதிவு செய்யப்பட்ட நிலையில் கொரோனோ நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் வழிபாடு செய்ய உள்ளனர். அதேபோல் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.