பீகாரில் மந்திரியின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை


பீகாரில் மந்திரியின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
x

பீகாரில் மந்திரியின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

பாட்னா,

பீகாரின் தொழில்துறை மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.எல்.ஏ.வுமான சமீர் மகசேத்தின் உறவினர் ஒருவர் மீது வரி ஏய்ப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் மந்திரியின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சார்பில் நேற்று அதிரடி சோதனை நடந்தது. தலைநகர் பாட்னா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அந்த நபருக்கு தொடர்பான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

மேலும் பாட்னாவில் உள்ள மகசேத்தின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று, அவரது உறவினர் குறித்து விசாரித்தனர். இதை மந்திரியும் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'ஆம், எனது தூரத்து உறவினர் ஒருவர் குறித்து விசாரிப்பதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (நேற்று) எனது வீட்டுக்கும் வந்தனர். இந்த வழக்கில் எனக்கு தொடர்பில்லை என்பதையும், எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்திக்கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.


Next Story