வருமான வரி செலுத்துவோர் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் சேர தடை: அக்டோபர் 1-ந்தேதி அமல்


வருமான வரி செலுத்துவோர் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் சேர தடை: அக்டோபர் 1-ந்தேதி அமல்
x

கோப்புப்படம்

வருமான வரி செலுத்துவோர் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந் தேதி அடல் ஓய்வூதிய யோஜனா (ஏபிஒய்) திட்டத்தை அறிமுகம் செய்தது. இது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பினை வழங்குகிறது. அவர்களது சந்தா பங்களிப்பின்பேரில் 60 வயது ஆன பிறகு அவர்களுக்கு மாதம் ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம் வரையில் இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் மத்திய அரசு ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி அக்டோபர் 1-ந் தேதி முதல், வருமான வரி செலுத்துபவர்கள் இந்த அடல் ஓய்வூதிய யோஜனா திட்டத்தில் சேர முடியாது.

அக்டோபர் 1-ந் தேதி முதல் அல்லது அதற்கு பிறகு இணைந்த சந்தாதாரர், விண்ணப்பித்த தேதிக்கு முன்னர் வருமான வரி செலுத்துபவராக இருப்பது கண்டறியப்பட்டாலும், அடல் ஓய்வூதிய யோஜனா கணக்கு மூடப்பட்டு, இதுவரை திரட்டப்பட்ட ஓய்வூதிய சந்தா அவருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story