நாட்டின் கலாசாரம், சனாதன தர்மத்தை இந்தியா கூட்டணி அவமதிக்கிறது: அமித்ஷா விமர்சனம்


நாட்டின் கலாசாரம், சனாதன தர்மத்தை இந்தியா கூட்டணி அவமதிக்கிறது: அமித்ஷா விமர்சனம்
x

ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் உள்ள பெனேஷ்வர் தாமில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார். அப்போது, நாட்டில் கலாசாரம், சனாதன தர்மத்தை இந்தியா கூட்டணி அவமதித்து வருவதாக விமர்சனம் செய்தார். மேலும் அவர் கூறியதாவது;

கடந்த இரண்டு நாட்களாக இந்தியா கூட்டணி சனாதன தர்மத்தை அவமதித்து வருகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுகின்றனர். வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியா கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லலாம்.

லஷ்கர்-இ-தொய்பாவை விட இந்து அமைப்புகள் ஆபத்தானவை என்று ராகுல் காந்தி கூறினார். ராகுல் காந்தி இந்து அமைப்புகளை லஷ்கர்-இ-தொய்பாவுடன் ஒப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான அரங்கில் தான் இந்து மதத்தை அவமதித்து அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார். உதயநிதியின் வெறுப்பு பேச்சுடன் காங்கிரஸ் உட்படுகிறது என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். மதத்தை விமர்சித்ததற்காக அமைச்சர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


Next Story