'2011-ல் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்ந்தது' - ராகுல் காந்தி


2011-ல் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்ந்தது - ராகுல் காந்தி
x

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வேகத்தடையாக வந்தவர் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த இந்திய பொருளாதாரத்தில் வேகத் தடையாக பிரதமர் மோடி வந்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2011-ம் ஆண்டிலேயே உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்ததாக குறிப்பிட்டார்.

மேலும், பிரதமர் மோடி தமக்கு வேண்டப்பட்ட ஒரு சில நண்பர்களின் ஆதாயத்திற்காக நாட்டையே வெறுமையாக்கி கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள ராகுல் காந்தி, பொருளாதாரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு அருகில் கூட பா.ஜ.க. அரசு எப்போதும் வரமுடியாது என்று தெரிவித்துள்ளார்.



Next Story