கிழக்கு லடாக் விவகாரம்: 16-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியா-சீனா ஒப்புதல்


கிழக்கு லடாக் விவகாரம்: 16-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியா-சீனா ஒப்புதல்
x

Image Courtesy: PTI

கிழக்கு லடாக் விவகாரத்தில், 16-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியா-சீனா ஒப்புதல் வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் இந்தியா-சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

பதற்றத்தை தணிக்க இருதரப்பு ராணுவமும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான 15-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி நடைபெற்றது.

இந்த நிலையில் இருதரப்பு இடையிலான ராணுவ ரீதியிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க இந்தியா மற்றும் சீனா ஒப்புக்கொண்டுள்ளன.


Next Story