இந்திய நாடு உள்நாட்டுப் போரை நோக்கி செல்கிறது -லாலு பிரசாத் யாதவ் வேதனை


இந்திய நாடு உள்நாட்டுப் போரை நோக்கி செல்கிறது -லாலு பிரசாத் யாதவ் வேதனை
x

 File picture

இந்திய நாடு உள்நாட்டுப் போரை நோக்கி செல்கிறது -லாலு பிரசாத் யாதவ் வேதனை

இந்திய நாடு உள்நாட்டுப் போரை நோக்கி செல்கிறது -லாலு பிரசாத் யாதவ் வேதனைபாட்னா:

பொதுக் கூட்டத்தில் ஒன்றில் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தள லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது;-

பா.ஜ.க.வின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது நாடு உள்நாட்டுப் போரை நோக்கி நகர்கிறதோ எனத் தோன்றுகிறது. நாட்டு மக்கள் இந்த வேளையில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியனவற்றிற்கு எதிராக போராட வேண்டும். நாம் ஒன்றிணைந்து போராடினால் தான் வெற்றி கிடைக்கும். மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என கூறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 5-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த மாதம் தான் லாலு ஜாமீனில் வெளிவந்தார்.

இத்தகைய சூழலில் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிந்து சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தமுறை, அரசுப் பணி நியமனங்களில் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் யாதவ் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story