இந்தியாவில் இன்று 124 பேருக்கு கொரோனா


இந்தியாவில் இன்று 124 பேருக்கு கொரோனா
x

இந்தியாவில் நேற்றை விட இன்று கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் புதிதாக 124 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,415 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று 112 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,25,312 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,415 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை. இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,33,445 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 169 பேர் வீடு திரும்பிய நிலையில், இதுவரை மொத்தம் 4,44,90,452 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.67 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story