தற்சார்பு நிலையை இந்தியா அடைய வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் விருப்பம்


தற்சார்பு நிலையை இந்தியா அடைய வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் விருப்பம்
x

தற்சார்பு நிலையை அடைந்த பிறகு உலகத்துக்கே இந்தியா அமைதியை போதிக்கும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

நாக்பூர்,

சுதந்திர தினத்தையொட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேசிய கொடி ஏற்றினார்.

பிறகு அவர் பேசியதாவது:- நமது நாடு, நீண்ட போராட்டத்துக்கு பிறகு விடுதலை பெற்றது. அது தற்சார்பு நிலையை அடைவது அவசியம். சுதந்திரமாக இருக்க விரும்புபவர்கள், எல்லாவற்றிலும் தற்சார்புடன் இருப்பது அவசியம். தற்சார்பு நிலையை அடைந்த பிறகு உலகத்துக்கே இந்தியா அமைதியை போதிக்கும்.

மக்களிடையே தேசபக்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். பாடுபடுகிறது. நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்காமல், நாம் நாட்டுக்கு என்ன செய்தோம் என்று கேட்க வேண்டும்.

இப்போது இருந்து நாட்டின் முன்னேற்றத்தை பற்றி சிந்தித்தபடியே வாழ உறுதி எடுத்துக் கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story