இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,155- பேருக்கு கொரோனா தொற்று


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,155- பேருக்கு கொரோனா தொற்று
x

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,155- ஆக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. கடந்த 5-ந் தேதி 4 ஆயிரத்தை தாண்டியும், 6-ந் தேதி 5 ஆயிரத்தை தாண்டியும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது. 6 ஆயிரத்து 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ந் தேதிக்கு பிறகு, கடந்த 203 நாட்களில் இதுதான் அதிக அளவாக இருந்தது.

இந்த நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,155- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 31,194- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 5.63 சதவிகிதமாக உள்ளது.


Next Story