இந்தியாவில் 5 ஆயிரத்துக்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு


இந்தியாவில் 5 ஆயிரத்துக்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு
x

கோப்புப்படம் 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில், கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு இறங்குமுகமாக இருக்கிறது. நேற்று முன்தினம் 7 ஆயிரத்து 171 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 874 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 49 ஆயிரத்து 671 ஆக உயர்ந்தது.

கொரோனாவில் இருந்து இதுவரை மொத்தம் 4 கோடியே 43 லட்சத்து 70 ஆயிரத்து 878 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக சரிந்து வருகிறது. இதன்படி இன்று ஆயிரத்து 750 ஆக குறைந்தது. இன்று காலை நிலவரப்படி 47 ஆயிரத்து 246 பேர் சிகிச்சையில் இருந்தனர்.

கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 40 பேர் பலியானார்கள். நேற்று பலி எண்ணிக்கை 25 ஆக குறைந்தது. இன்று கொரோனா பாதிப்புக்கு 14 பேர் உயிரிழந்தநிலையில் இறப்பு எண்ணிக்கை 5,31,547 ஆக அதிகரித்துள்ளது. இதில் கேரளாவில் விடுபட்ட 6 மரணங்களும் அடங்கும்.

1 More update

Related Tags :
Next Story