இந்தியாவில் நேற்றை விட இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு


இந்தியாவில் நேற்றை விட இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
x

இந்தியாவில் புதிதாக 8,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் 8,329 நேற்று 8,582 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 8,084 ஆக குறைந்தது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,32,22,017 லிருந்து 4,32,30,101 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 44,513 லிருந்து 47,995 ஆனது.

தொற்றால் நாட்டில் 10 பேர் பலியாகினர். இதுவரை நாட்டில் 5 லட்சத்து 24 ஆயிரத்து 771 பேர் தொற்றுக்கு இரையாகி உள்ளனர்.

கொரோனா தொற்றில் இருந்து இன்று ஒரு நாளில் 4,592 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 4 கோடியே 26 லட்சத்து 57 ஆயிரத்து335 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்திருக்கிறார்கள்.

நாட்டில் கடந்த ஒரே நாளில் 11 லட்சத்து 77 ஆயிரத்து 146 பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும், மொத்தம் 195 கோடியே 19 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story