பெகாசஸ் மென்பொருள் மூலம் என்னை உளவு பார்த்தனர்: ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு


பெகாசஸ் மென்பொருள் மூலம் என்னை உளவு பார்த்தனர்: ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு
x

ஜனநாயகத்திற்கு அவசியமான அமைப்பு கட்டமைப்புகள் கட்டுபடுத்தப்படுகின்றன என்று ராகுல் காந்தி கூறினார்.

லண்டன்,

கங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது: - ஜனநாயகத்திற்கு அவசியமான அமைப்பு கட்டமைப்புகள் கட்டுபடுத்தப்படுகின்றன. இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பான ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி என்னையும் அரசு வேவு பார்த்தது. பெகாசஸ் உளவு செயலி குறித்து உளவுத்துறை அதிகாரிகள் என்னை எச்சரித்தனர். அரசியல் கட்சித்தலைவர்கள் பலரது செல்போன்களில் பெகாசஸ் ஓட்டுக்கேட்பு மென்பொருள் உள்ளது.. என்னுடைய செல்போனிலும் பெகாசஸ் இருந்தது, போனில் கவனமாக பேசுங்கள் என எச்சரித்தனர்" என்றார்.


Next Story