2022-23 ஆண்டில் ரூ.2.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய இந்திய ரெயில்வே


2022-23 ஆண்டில் ரூ.2.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய இந்திய ரெயில்வே
x

இந்திய ரெயில்வே துறை நடப்பு 2022-23 நிதியாண்டில் ரூ.2.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்து உள்ளது.

புதுடெல்லி,

இந்திய ரெயில்வே வெளியிட்டு உள்ள அறிக்கையில், நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் இந்திய ரெயில்வே துறை சாதனை அளவாக ரூ.2.40 லட்சம் கோடி வருவாயை ஈட்டி உள்ளது. இது, முந்தின ஆண்டை விட ரூ.49 ஆயிரம் கோடி அதிகம் ஆகும்.

இதனால், ரெயில்வே துறையில் 25 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது. இவற்றில் இந்திய ரெயில்வேயின் பயணிகள் வருவாய், இதுவரை இல்லாத வகையில் 61 சதவீதம் அளவுக்கு வருவாய் ஈட்டி சாதனை வளர்ச்சியை எட்டியுள்ளது.

இதன்மூலம், இந்த ஆண்டில் ரூ.63,300 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இதுபோக நடப்பு நிதியாண்டில் சரக்கு போக்குவரத்துக்கான வருவாயும் முந்தின ஆண்டை விட 15 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது.

இதன்படி ரூ.1.62 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. இதனால், 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ரெயில்வே துறை, ஓய்வூதிய செலவினங்களை முழு அளவில் எதிர்கொள்ளும் திறனை பெற்று உள்ளது.

அனைத்து வருவாய் செலவினங்களும் போக, ரெயில்வே துறை ரூ.3,200 கோடியை பெற்று உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.


Next Story