இந்திய ரெயில்வேயின் 'உலா ரெயில்' முன்பதிவு தொடக்கம்


இந்திய ரெயில்வேயின் உலா ரெயில் முன்பதிவு தொடக்கம்
x

முதல் உலா ரெயில் வருகிற 23-ந்தேதி மதுரையில் இருந்து காசிக்கு புறப்பட உள்ளது.

புதுடெல்லி,

இந்திய ரெயில்வேயுடன் டிராவல் டைம்ஸ் நிறுவனம் சேவை பங்குதாரராக இணைந்து பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் 'உலா ரெயில்' மூலம் 'திவ்ய காசி-ஆடி அமாவாசை யாத்திரை' பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதன்படி முதல் உலா ரெயில் வருகிற 23-ந்தேதி மதுரையில் இருந்து காசிக்கு புறப்பட உள்ளது.

இந்த பயணத்தில் ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் ஆலயம், கொல்கத்தா பேலூர் மடம், விக்டோரியா மெமோரியல், விஷ்ணு பாத தரிசனம், காசி கங்கையில் விஸ்வநாதர் ஆலய தரிசனம், விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதி உள்ளிட்ட புனித தலங்கள் வழியாக செல்கிறது.

புனித தலங்களுக்கு செல்லும் நபர்களுக்கு பாதுகாப்பாக ரெயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு பாதுகாவலர் மூலம் பாதுகாப்பும் வழங்கப்பட உள்ளது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் போது பொதுமக்களின் வசதிக்கேற்ப 3 வகையாக பிரிக்கப்படுகிறது.

பட்ஜெட், ஸ்டாண்டர்ட், கம்போர்ட் ஆகிய 3 பிரிவுகளில் முன்பதிவு செய்யப்படுகிறது. பட்ஜெட் பிரிவில் ரெயில் பயணம், பேருந்து பயணம், தங்குவதற்கு கம்யூனிட்டி ஹால் மற்றும் உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஸ்டாண்டர்ட் பிரிவில் ரெயில் பயணம், பேருந்து பயணம், தங்குவதற்கு தனி அறை மற்றும் உணவு வகைகள் வழங்கப்படுகிறது. அதே போல் கம்போர்ட் பிரிவு முன்பதிவில் ரெயிலில் குளிர்சாதன பெட்டியில் பயணம், பேருந்து பயணம், தங்குவதற்கு தனி அறை மற்றும் உணவு வகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story