இந்திய மாணவர்கள் விரைவில் சீனா சென்று மீண்டும் படிப்பை தொடர நடவடிக்கைகள் தீவிரம் - சீன தூதர்


இந்திய மாணவர்கள் விரைவில் சீனா சென்று மீண்டும் படிப்பை தொடர நடவடிக்கைகள் தீவிரம் - சீன தூதர்
x

இந்திய மாணவர்கள் விரைவில் சீனாவில் படிப்பைத் தொடங்குவார்கள் என சீன தூதர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

இந்திய மாணவர்கள் விரைவில் சீனாவில் படிப்பைத் தொடங்குவார்கள் என சீன தூதர் தெரிவித்தார்.

"சீனா இந்திய மாணவர்களை வரவேற்கிறது. வெகு விரைவில் சீனாவில் படிப்பை மீண்டும் தொடங்க இந்திய மாணவர்களின் முதல் குழுவினர் சீனாவுக்கு புறப்படுவார்கள்.

இதற்காக இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட துறைகளும் இணைந்து செயல்படுகின்றன" என்று இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்தார்.

இந்திய மாணவர்கள் 20,000க்கும் மேற்பட்டோர் கொரோனா காலத்தில், சீனாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியதால், சீனாவில் தங்கள் படிப்பை மீண்டும் தொடங்குவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

கொரோனாவால் சீனா விதித்த விசா கட்டுப்பாடுகள் காரணமாக மாணவர்கள் அங்கு செல்ல முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டனர். அதிலும், பெரும்பாலானவர்கள் மருத்துவ மாணவர்கள் ஆவர்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், வெளிநாட்டு மாணவர்கள் சீனாவுக்கு மீண்டும் செல்ல தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து முதற்கட்டமாக இந்திய மாணவர்கள் அடங்கிய குழு முறையான விசா பெற்று சீனாவுக்கு விரைவில் செல்வார்கள் எனத் தெரிகிறது .


Next Story