பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் இந்திய முப்படைகள் பங்கேற்பு


பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் இந்திய முப்படைகள் பங்கேற்பு
x

பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் இந்திய முப்படைகள் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்டனர்.

பிரான்ஸ் நாட்டு தேசிய தினம் வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

பிரான்ஸ் தேசிய தினத்தையொட்டி பிரமாண்ட அணிவகுப்பு நடக்கிறது. இதில் இந்தியாவின் முப்படைகளும் பங்கேற்கின்றன. அத்துடன் 3 ரபேல் போர் விமானங்களும் சாகசத்தில் ஈடுபடுகின்றன.

இந்த அணிவகுப்பில் பங்கேற்பதற்காக 269 பேர் கொண்ட இந்திய முப்படையினர் குழு நேற்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் புறப்பட்டனர். இவர்கள் பிரெஞ்சு படையினருடன் இந்த பிரமாண்ட அணிவகுப்பில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த தகவலை ராணுவம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸ் ராணுவத்துக்கு இடையே முதல் உலகப்போரில் இருந்தே நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story