பாகிஸ்தான் தூதரக உயரதிகாரி வீட்டில் இந்திய பெண்ணுக்கு பாலியல் தொல்லை; போலீசார் விசாரணை


பாகிஸ்தான் தூதரக உயரதிகாரி வீட்டில் இந்திய பெண்ணுக்கு பாலியல் தொல்லை; போலீசார் விசாரணை
x

உசைனுக்கு எதிராக பிரிவு 354-ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

டெல்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உயரதிகாரியாக இருப்பவர் சாத் அகமது வர்ரைச். துணை தூதர் அந்தஸ்தில் உள்ள இவருடைய வீட்டில் மின்ஹாஜ் உசைன் என்பவர் சமையல்காரராக பணியாற்றி வந்திருக்கிறார்.

அந்த வீட்டில் பணிப்பெண்ணாக இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு, உசைன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இதுபற்றி அந்த பெண், உயரதிகாரி சாத் அகமதுவிடம் புகாராக கூறியிருக்கிறார். எனினும், உசைன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்.

இதன்பின், இதுபற்றி கடந்த ஜூன் 28-ந்தேதி டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, உசைனுக்கு எதிராக பிரிவு 354-ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story