இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர பாப்புலர் பிரண்ட் ஆப் திட்டமிட்டு கொலைகார படைகளை அமைத்தது -என்ஐஏ குற்றப்பத்திரிகை


இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர பாப்புலர் பிரண்ட் ஆப் திட்டமிட்டு கொலைகார படைகளை அமைத்தது -என்ஐஏ குற்றப்பத்திரிகை
x
தினத்தந்தி 21 Jan 2023 6:54 AM (Updated: 21 Jan 2023 7:35 AM)
t-max-icont-min-icon

2047 ஆம் ஆண்டுக்குள் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கொலைகார படைகளை அமைத்தது என என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது.

புதுடெல்லி:

சமூகத்தில் பயங்கரவாதம், வகுப்புவாத வெறுப்பு, அமைதியின்மை ஆகியவற்றை உருவாக்கி, 2047க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு எதிரிகளை வீழ்த்த 'சேவை அணிகள்' என்ற ரகசிய குழுக்களை உருவாக்கியது. ' அல்லது 'கொலைகார படைகளை உருவாக்கியது என தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.

கர்நாடகாவின் தக்ஷினாவில் உள்ள சுல்லியா தாலுகாவில் உள்ள பெல்லாரே கிராமத்தில் கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி பாஜகவின் யுவமோர்ச்சா மாவட்டக் குழு உறுப்பினர் பிரவீன் நெட்டாரு கொல்லப்பட்டார். இது தொடர்பாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளது.

இந்த் வழக்கில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் 20 உறுப்பினர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது.

கடந்த செப்டம்பரில் உள்துறை அமைச்சகம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அதன் கூட்டாளிகள் மற்றும் துணை நிறுவனங்களை சட்டவிரோதமான செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் கீழ் ஐந்தாண்டு காலத்திற்கு தடைசெய்தது.


Next Story