பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் தொடரும்- அமித்ஷா


பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணம்  தொடரும்- அமித்ஷா
x

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் தடையின்றி தொடரும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்

புதுடெல்லி,

7 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். 3-வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இதில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் உள்ளார்.இந்த நிலையில், வாரணாசி ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமரின் வேட்புமனுவை 4 பேர் முன்மொழிந்து கையெழுத்திட்டனர். அப்போது பிரதமருடன் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இது தொடர்பாக அமித்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இந்திய கலாச்சாரத்தின் மையமான பாபா விஸ்வநாத்தின் நகரமான காசியில் இருந்து தொடர்ந்து 3-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த பிரதமர் மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.10 ஆண்டுகளில் காசிக்கு (வாரணாசி) உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சியை மோடி கொண்டு வந்துள்ளார்.அவர் இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் மேம்படுத்தியுள்ளார். மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பெருமைக்கான பயணம் தடையின்றி தொடர பாபா விஸ்வநாத் மற்றும் கங்கா 'மையா' ஆகியோரை நான் பிரார்த்திக்கிறேன்.இந்த முறையும் காசி மக்கள் மோடியை சாதனைக்குரிய வித்தியாசத்தில் வெற்றி பெற ஆசீர்வதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story