இந்தியாவில் முதல் தனியார் ரயில் சேவை தொடங்கியது: கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கம்


இந்தியாவில் முதல் தனியார் ரயில் சேவை தொடங்கியது: கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கம்
x
தினத்தந்தி 14 Jun 2022 7:43 PM IST (Updated: 14 Jun 2022 7:59 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் இன்று கோவையில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியது.

கோவை,

இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் இன்று கோவையில் இருந்து முதல் பயணத்தை தொடங்கியது. வாரம் ஒரு முறை செல்லும் இந்த ரெயிலில் டிக்கெட் முதல் பராமரிப்பு பணிகள் வரை தனியார் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது.

கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல 1,458 கிலோமீட்டர் தூரத்துக்கு ஸ்லீப்பர் கட்டணம் ரூ. 1,280 . ஆனால் தனியார் நிறுவனம் வசூலிக்கும் ரெயில் கட்டணம் ரூ.2,500 மற்றும் பேக்கேஜ் கட்டணமானது 4,999.

மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.2,360 ஆனால் தனியார் ரெயில் கட்டணம் ரூ. 5,000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 7,999

குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.4,820 ஆனால், தனியார் ரெயில்கட்டணம் ரூ.7000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 9,999.

குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.8,190 ஆனால் தனியார் ரெயில் கட்டணம் ரூ.10,000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 12,999 வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு மக்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

ரெயில் டிக்கெட் இதில் பேக்கேஜ் கட்டணத்தில் கோவை முதல் சீரடி சென்று திரும்பும் ரெயில் கட்டணம், சீரடியில் சிறப்பு தரிசனம், 3 பேர் தங்கும் ஏசி ரூம் வசதி, சுற்றுலா வழிகாட்டி, பயண இன்சுரன்ஸ் போன்றவை அடங்கும். ஆனால் இதில் உணவு மற்றும் ஆந்திராவில் உள்ள மந்திராலயம் கோயில் தரிசனம் போன்றவை அடங்காது.

இந்த ரெயில் ஆனது கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு, மந்திராலயம் வழியாக சீரடி சென்றடையும். இதற்கான டிக்கெட் ஆனது கோவை, திருப்பூர்ம் ஈரோடும் சேலத்தில் உள்ள சாய்பாபா கோயில்களில் கிடைக்கும் என தனியார் ரெயில் நிர்வாக தெரிவித்துள்ளது.

எம்.பி.க்கள் எதிர்ப்பு ரெயில்வே துறை சேவைகளை தனியார் வசம் ஒப்படைக்க தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் எம்.பி.க்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இன்று முதல் தனியார் ரெயில் சேவை கோவையில் இருந்து தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story